தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை.
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் அதிகரிக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை நடைபெறும் இருக்கும் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் தரிசனத்திற்காக தடையை நீக்குவதா? நீட்டிப்பதா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. தியேட்டர்களை திறக்க ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்த நிலையில், இதற்கான முடிவு 20ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், பொதுசுகாதாரத்துறை பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…