தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளது.
சமுதாய, அரசியல் கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும். ஜனவரி 3ம் தேதியிலிருந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும். மேலும், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அண்டை நாடுகளில் ஓமிக்ரான் பரவி வருவதால் மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…