#Breaking: தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு அதாவது மே 17 வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மே 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி:
- அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்(IT&ITS) 10% பணியாளர்களை கொண்டு குறைந்தது 20 நபர்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
- அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
- சலூன் மற்றும் அழகு நிலையங்கள் தவிர மற்ற அனைத்து தனி கடைகளும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி:
- 50% பணியாளர்களை கொண்டு குறைந்தபட்சமாக 20 நபர்கள் கொண்டு ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட ) செயல்பட அனுமதி.
- நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை சூழ்நிலைக்கேற்ப 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- மின்னணு வன்பொருள் உற்பத்தியில் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- கிராமப்புரங்களில் உள்ள நூற்பாலைகள் 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்க 30 % பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- IT&ITS தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் 50% குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதி.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானம் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி.
- கட்டுமான பணிகளுக்கான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை.
- தனி கடைகளுக்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
- கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
- SEZ, EOU, தொழிற் நகரியங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் (ஊரக நகரம்) 50 % பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்கள் கொண்டு தொடர்ந்து செயல்படும்.
- நகராட்சி, மாநகராட்சி உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.
#BREAKING:தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல்#CoronaVirus #COVID19India #CoronaLockdown #TNFightsCorona pic.twitter.com/pyty934vxa
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025