அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், பயிர்ப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர்கள் குழு.
சென்னை : கடந்த 11-ஆம் தேதி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும். பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இந்தக் குழுவில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர் திரு.சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த குழு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், பயிர்ப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்தது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…