#breaking: கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது – மத்திய அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
மத்திய அரசு அண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பரிசோதனையில் கலந்துகொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஆசிப் ரியாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.