#BREAKING: தமிழ்நாடு ஆட்சி பணியை உருவாக்க நீதிமன்றம் ஆலோசனை!
தமிழ்நாடு ஆட்சிப்பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அஸ்ருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை.
அனைத்து குரூப் 1 அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெற தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐஏஎஸ் அந்தஸ்து பெற அனைத்து குரூப் 1 அதிகாரிகளையும் இணைத்து தமிழ்நாடு ஆட்சிப்பணி உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் துறையினர் 7-8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் நிலையில், பிறதுறைகளில் உயர்ந்த பதிவில் இருந்தாலும் ஐஏஎஸ் அந்தஸ்து பெற 30 ஆண்டுகள் தேவைப்படுகிறது என நீதிபதி எம் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். குரூப் 1 தேர்வு மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் தங்களை மாநில சிவில் சர்வீசேர்க்க கோரி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.