#Breaking:பரபரப்பு…குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னை:திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு.
சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால்,D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின.
கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மக்கள் நேற்று இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,தீயணைப்பு மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,கட்டட இடிபாடுகளுக்கு இடையில் யாரேனும் சிக்குயுள்ளனரா? என்று தேடி வருகின்றனர்.
மேலும்,காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனால்,இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025