கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால், கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டுள்ளனர். அப்போது, காவல்துறைக்கும், வீட்டின் முன்பு திரண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கோவையில் வேலுமணி வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏகே செல்வராஜ், பிஆர்ஜி அருண்குமார் மற்றும் ஜெயராம் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. கோவை சுகுணாபுரத்தில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைநடைபெற்று வருகிறது.
எஸ்பி வேலுமணியின் வீட்டிற்கு செல்லும் இணைப்பு சாலைகளை காவல்துறையினர் தடுப்பு வைத்து அடைத்ததர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்த எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடியதால் கைது செய்யப்பட்டனர். இதனால் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…