#BREAKING : சூரப்பா மீதான ஊழல் புகார்..! முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு…!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் நீதியரசர் கலையரசன்.
கடந்த 2018-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ரூ.200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை கலையரசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை நிறைவுபெற்றதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீதியரசர் கலையரசன் அவர்கள் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025