BREAKING: கோயம்பேட்டில் எஸ்.ஐ-க்கு கொரோனா தொற்று .!

கோயம்பேடு காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நேற்று மட்டும் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில், நேற்று மட்டும் 94 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல் உதவி ஆய்வாளரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்றுவருகிறார்.
கோயம்பேட்டில் இதற்கு முன் வியாபாரி, முடி திருத்துபவர் உட்பட 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எஸ்.ஐ-க்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025