#BREAKING: சென்னையில் 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று.!
சென்னையில் 3 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சார்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியில் இருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த தூய்மை பெண்ணுடன் தொடர்பில் இருந்த, அவரது குடும்பத்தினரில் 3 வயது குழந்தை உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையெடுத்து, 5 பேரும் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.