சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 510 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4882 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு அவ்வப்போது தொற்று உறுதியாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்த 28 வயது மதிப்புத்தக்க தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் உள்பட 100 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…