BREAKING: கொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்தினருடன் 14 நாட்கள் தனிமை.!

சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு செய்தாலே அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில், மொத்தமாக 30 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதில், 12 அரசு பரிசோதனை மையங்கள் , 18 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு செய்தாலே அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் 6,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும், கொரோனா பரிசோதனை மையங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய உபகரணங்கள் கொடுக்க வேண்டும் என கூறினார்.