#Breaking: தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று 536 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 13,706 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 11,094 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,14,43 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 10,680 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட 1,091 பேரில் 55 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.