#Breaking: தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா.! பாதிப்பு 6000-ஐ தாண்டியது.!
தமிழகத்தில் மேலும் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 6000-ஐ தண்டியுள்ளது.
தமிழகத்தில் மேலும் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் 5409 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6009 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 399 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3043 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இருவர் சென்னையை சேர்ந்தவர்கள், ஒருவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று 58 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1605 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இன்று ஒரே நாளில் 13,980 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 600 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. இந்த 600 பேரில் ஆண்கள் 405 பேர், பெண்கள் 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில் தான் மிகவும் குறைவாக இறப்பு விகிதம் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது கொரோனா வார்டில் 4,361 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.