BREAKING:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.எனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வரை 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாரித்துள்ளது.
#coronaupdate:Chennai reports 3 new cases for #COVID19. All 3 travelled abroad.74 Y M return from USA at #Stanley,52 Y F return from USA at #Stanley,25 Y F return from Swiss at #KMC,.They are residents of Porur, Purasaivakkam, Keelkattalai rsptvly.Pts in isolation & stable. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 பேரில் இருவருவர் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள்.ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.