BREAKING:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி.!
தமிழகத்தில் இன்று காலை வரை கொரோனா வைரஸால் 15 பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
#coronaupdate: 3 new cases for #covid19 in Chennai. 65Y M return from New Zealand at Pvt.Hosp, 55Y F Saidapet at #KMC. 25Y M return from London at #RGGH. Patients are in isolation & under treatment.@MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
இவர்களில் நியூசிலாந்தில் இருந்து வந்த 55 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் , நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
லண்டனில் இருந்து வந்த 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.