#BREAKING: கொரோனாவின் இரண்டாவது அலை… இன்று 2,817 பேருக்கு பாதிப்பு.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஆதரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று 2,579 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 8,89,490 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,083 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், இன்று 1,634 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, 17,043 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.