தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 4,829 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 316 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கும் மொத்தம் 2,644 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 37 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,547 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 14,195 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,02,436 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 3,822 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்து இன்று அதிகம் பாதிக்கப்பட்டதில் திருவள்ளூரில் 63, விழுப்புரத்தில் 45, பெரம்பலூரில் 33, கடலூரில் 32 என கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…