தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இன்று 687 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 12,000 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 12,605 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,79,155 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 9021 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட 938 பேரில் 82பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…