#Breaking: சென்னையில் இன்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளத்தால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6760 ஆக உயர்வு.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் இருந்த நிலையில், இன்று புதிதாய் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 1486 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளது.