தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 8-ம் தேதி முதல் தஞ்சையில் பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதியானது. பின்னர், அந்த பள்ளியில் பயிலும் 58 மாணவிகள், ஒரு ஆசிரியர் மற்றும் 9 பெற்றோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர், 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளியில் 21 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கும், தஞ்சை கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள். 17 மாணவிகளுக்கும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் 6 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கும், ஒரத்தநாடு பகுதியில் உள்ள லிட்டில் ரோஸ் பள்ளியில் 3 மாணவர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் பயிலும் 9- 12 -ஆம் வகுப்பு வரை உள்ள 2.75 லட்ச மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நெறைய தினம் 11 பள்ளிகளை சேர்ந்த 6,120 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை மேகொள்ளப்பட்டதில், 1,000 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை, பிருந்தாவன் பள்ளியை சேர்ந்த 14 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும், மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளியை சேர்ந்த 15 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தஞ்சையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…