#BREAKING: கொரோனா பரிசோதனை.. மாதிரிகளில் வேறுபாடு .!
தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா வேகமாக பரவிவருவதால் அங்கிருந்து இந்திய வரும் அனைத்து பயணிகளுக்கும் உருமாறிய கொரோனா இருக்கிறது என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனால், அனைத்து விமான நிலையங்களில் பிரிட்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிபோசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன் வந்தவர்களிடம் பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இவர்களின் மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்தத்தில் 4 பேரின் மாதிரிகள் வேறுபாடு இருப்பதாக புனே ஆய்வு மையம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.