#Breaking:கொரோனா விதிமுறைகளை மீறிய வழக்குகள் வாபஸ் – டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!
தமிழகத்தில் முன்னதாக கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.மேலும்,வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.எனினும்,இ-பாஸ் பெற்றதில் முறைகேடு,காவல்துறையினரை தங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக டிஜிபி அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியது தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முன்னதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில்,தற்போது வழக்குகளை திரும்ப பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.