தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல்.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,02,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டியில் ஒரே நாளில் 146, கோவையில் 80, திருப்பூரில் 80, திருவள்ளூரில் 58 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,51,128 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,790 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 624 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,05,04 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,304 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது வரை 118 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 98 பேர் குணமடைந்தும், 20 பேர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…