#BREAKING: தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று.. மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான்!
தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 2 ஆயிரம் அதிகரித்து 10,978 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவங்கும் என்றும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 15.38 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 14,63,875 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு 74,805 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.