BREAKING: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது.!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,023 அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் 2757 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,023 அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 203 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 1,458 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததால் உயிரிழப்பின் எண்ணிக்கை30 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இன்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உள்ளது.
வீட்டு கண்காணிப்பில் 37,206 பேர் இருக்கின்றார்கள் என்றும் அரசு கண்காணிப்பில் 40 பேர் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 10,617 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,50,107 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வார்டில் 1,611 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.