#BREAKING: ராயபுரத்தில் 4000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 36, 841 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் இதுவரை 2,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,405பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.