#BREAKING: சென்னை ஐஐடியில் 200-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாகவே படிப்பிடிப்பாக மாணவர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலே போதும், யாரும் பதற்றமடைய வேண்டாம், கொரோனா கட்டுக்குள் தான் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்த தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், ஐஐடியில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025