#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா உறுதி.!

இன்று தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5,684பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,79,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 6,272 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனாவில் இருந்து 2,21,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,091 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,096 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025