#BREAKING: தமிழகத்தில் இன்று 5,928 பேருக்கு கொரோனா.! மொத்த பாதிப்பு 4,33,969 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,928 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,33,969 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,084 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,36,697 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 6,031 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,74,172 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,165 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 48,88,312 ஆக உள்ளது. மேலும், தற்போது 52,379 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025