#BREAKING : தஞ்சையில் 100 பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா..!
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 1 வருடமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது 9,10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பள்ளி மாணாக்கர்கள் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 8-ஆம் தேதி அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதியானது. பின்னர், அந்த பள்ளியில் பயிலும் 58 மாணவிகள், ஒரு ஆசிரியர் மற்றும் 9 பெற்றோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர், 13-ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
நேற்று மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளியில் 21 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கும், தஞ்சை கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள். 17 மாணவிகளுக்கும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் 6 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கும், ஒரத்தநாடு பகுதியில் உள்ள லிட்டில் ரோஸ் பள்ளியில் 3 மாணவர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதனால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் பயிலும் 9- 12 -ஆம் வகுப்பு வரை உள்ள 2.75 லட்ச மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.