#BREAKING: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா!
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.