தமிழக்தில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 29,870 லிருந்து 30,744 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,03,410 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744 ஆக உள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று ஒரேநாளில் 23,372 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து 28,71 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.94 லட்சகமாக அதிகரித்துள்ளது. இன்று சென்னை – 6,452, கோயம்புத்தூர் – 3,886, செங்கல்பட்டு – 2,377, கன்னியாகுமரி – 1,266, சேலம் – 1,080, திருவள்ளூர் – 1,069, ஈரோடு – 1,066, திருப்பூர் – 1,014 ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகபட்சமாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…