தமிழ்நாட்டில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 28,29,655 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பதிப்பில் இருந்து 3,043 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 27,17,686 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரேநாளில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை 36,886 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் அரசு மருத்துவமனையில் 9 பேரும், தனியார் மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா கண்டறியப்படத்தில், சென்னையில் மட்டும் 6,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று 1,35,672 மாதிரிகள் பரிசோதனை செய்த நிலையில், ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15,379-ஆக உள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி 1,489 ஆக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் 2 ஆயிரம் உயர்ந்து, இன்று 15,379 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 75,083 ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…