#BREAKING: கூட்டுறவு மசோதா – வாபஸ் பெற முடிவு!
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம்.
கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற ஆளுநருக்கு சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜனவரியில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருந்தது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைப்பது தாமதம் ஆகி வரும் நிலையில், அதை திரும்ப பெறுவதாக சட்டத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.