ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதா? என நீதிபதி கேள்வி.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுக தெரிவித்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதற்கு, பொதுக்குழுவுக்கு தடை தான் கோரப்பட்டுள்ளது என்றும்,
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம்
விளக்கமளித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இ.பி.எஸ். தரப்பு பதில்மனு தாக்கல்செய்த பின், வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்தால் என்ன? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், பொதுக்குழு திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், உடனடியாக விசாரித்து உத்தரவிடுங்கள் என நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை இன்று ஒத்திவைத்தனர்.
அந்த வகையில் இன்று மதியம் இந்த வழக்கு மீதான விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு தற்காலிக பொது செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு வழக்கை தள்ளி வைக்கலாம், ஆனால் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டிஸ் அனுப்பப்பட வேண்டும்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்குஉத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…