#BREAKING: சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 230-ல் இருந்து 357-ஆக உயர்வு .!
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 230-ல் இருந்து 357-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550ஆக அதிகரித்து உள்ளது. மேலும் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 31 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1409 ஆக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு 1,724 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 230-ல் இருந்து 357-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Here’s the updated list of Containment Zones in #Chennai.#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/ayfvcAnFLa
— Greater Chennai Corporation (@chennaicorp) May 5, 2020