#BREAKING: தமிழகத்தில் தொடர் உயர்வு… இன்று 2,500-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!
தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 8,86,673 பேர் இதுவரை பாதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக 2,000க்கு மேற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 969 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 8,86,673 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 1,527 இன்று குடமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 8,58,075 பேர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 12,719 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று 83,713 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில், தற்போது 15,879 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.