#BREAKING: தொடர் நடவடிக்கை., ஒரே நேரத்தில் 6 பேரை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக.!

Default Image

அதிமுகவில் இருந்து மேலும் 6 பேரை நீக்கி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் உள்ளவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சிலர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். இதன்பின் அதிமுக அவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது. இதுபோன்று கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுபவர்கள் மீது ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், தற்போது ஒரே நேரத்தில் அதிமுகவில் இருந்து 6 பேரை நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கழக கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதாலும், குறிப்பாக வரும் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து தேர்தலில் பணியாற்றும் காரணத்தினால் இன்று முதல் நீக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வி.ஏழுமலை, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் சேர்ந்த ஈஸ்வரி ஈஸ்வரசாமி, எ.நாகராஜன், எம்.ரங்கசாமி, கே.கமல்ஹாசன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கே.ஸ்ரீதர் ஆகிய 6 ஆகிய பேரும் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள் என்றும் இவர்களுடன் கழக தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்