காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குஷ்பு காங்.,இருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் 2014ஆண்டு முதல் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார்.ஆனால் சமீப காலமாகவே குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் நேற்று மாலை டெல்லிக்கு சென்றார்.
ஆனால் அவர் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை காங்கிரஸ் நீக்கம் செய்த தகவலை வெளியிட்டது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நடிகை குஷ்பு காங்.,இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பி என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும்,மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் என்னை அடக்கி வைத்தனர் என்று நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் குஷ்பு கூறியுள்ளார்.
உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும். நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்தேன் என்று நடிகை குஷ்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட ருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாக அக்கடிதத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது. அவ்வாறு டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்தித்து நடிகை குஷ்பு மற்றும் அவருடன் பல பிரபலங்களும் பாஜகாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…