மாணவன் செல்வா சூர்யா உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை 11-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
நெல்லையில் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் செல்வ சூர்யா, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்ததை அடுத்து, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை 11-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…