#BREAKING : சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்..! பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு…!
சென்னை உயர்நீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு ஏற்கனவே 7 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ள நிலையில், தற்போது 8 வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே 7 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, 8 வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்றும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.