பாரதமாதா ,மற்றும் தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, கிருஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் அருமனையில்,முன்னதாக நடைபெற்ற மத பிரச்சார கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து வீடியோ ஆதாரத்தின் பெயரில் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மதுரையில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து,ஜாமினில் விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்,அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். முதல் தகவல் அறிக்கையின் நகல் கிடைக்காததால் அதன் ஜெராக்ஸ் பிரதியை தாக்கல் செய்ய ஜார்ஜ் பொன்னையா அனுமதி கேட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர அவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,வயது முதிர்வு மற்றும் இதய நோயாளியாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளதைக் கருத்தில் கொண்டு,அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில்,அவர் தினமும் கையெழுத்திட வேண்டும்,அதேபோல இனிமேல் அமைதியை குழைக்கும் வகையில் பேசமாட்டேன் என அவர் பிரமாணப்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…