பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும், ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின், இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் தொடகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா,…
சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…