காமன்வெல்த் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்றார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் மகளிர் சேபர் தனிநபர் பிரிவில் வாள்வித்தை போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று அசத்தியுள்ளார். பவானி தேவி, 15-10 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…