#BREAKING: பள்ளிக் கல்வித் துறை ஆணையர் ஐகோர்ட்டில் ஆஜர்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலம் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். பணபலன் வழங்காததை எதிர்த்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹரிஹரன் தொடர்ந்த வழக்கில் ஆணையர் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணபலம் வழங்காதது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரருக்கு ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாக நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்க பள்ளிக் கல்வித் துறை ஆணையர் ஆஜராகியுள்ளார்.