#BREAKING : தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்…! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…!

Published by
லீனா
  • தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை அளவை ஆராய ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அளவை ஆய்ந்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.தா.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், ‘2020-2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு வரப்பெற்றுள்ளன. தரப்பினரிடமிருந்து சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதேபோன்று, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம்/ சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக்கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும்மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்த நிலையை சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய, மாண்பமை தில்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15-6-2021) உத்தரவிட்டுள்ளார்கள். இந்த ஆணையம், அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…

16 mins ago

“இந்த வெற்றி முன்பே தெரியும்”…அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சி பேச்சு!

அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…

51 mins ago

கோவைக்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்., ஐடி பார்க் முதல், கிரிக்கெட் மைதானம் வரை.,

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…

1 hour ago

47-வது அமெரிக்க அதிபரானார் ‘டொனால்ட் டிரம்ப்’! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…

1 hour ago

“என்னுடைய வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்”…டொனால்ட் டிரம்பு உறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…

2 hours ago

அதிபர் பதவியை நெருங்கும் டிரம்ப்.! ஜார்ஜியாவில் வெற்றி.!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…

2 hours ago