#BREAKING: ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் – உயர்கல்வித்துறை!

Default Image

பிப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் தேர்வே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை விளக்கம்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 1 -ஆம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கல்லூரிகள், தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்