#BREAKING: ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை
மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித கழிவுகளை ரோபோட், நவீன இயந்திரங்களை கொண்டு அகற்றகோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் கூறியுள்ளனர்.
மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் முழுமையான பதில் மனு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டனர். பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு 2013-லேயே தடை விதிக்கப்பட்டது. தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்கள் எடுக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. மனித கழிவுகளை இயந்திரங்களை கொண்டு அள்ளுவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.